தண்ணீர் குடிக்கும் போது ஏன் மேலே பார்த்தவாறு குடிக்க கூடாது என தெரியுமா?

எல்லா உயிரினங்களும் உயிர் வாழ முக்கியமாக தேவைப்படுவது நீர் மட்டும் தான். உணவு இல்லாமல் கூட வாழந்து விடலாம். ஆனால், நீரில்லாமல் உயிர் வாழ முடியாது. தினமும் 2 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். தண்ணீரை குடிக்கும் முறைகளை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.

நின்று கொண்டு தண்ணிர் குடிக்க கூடாது:-

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது அது வயிற்றில் தெறித்து விழும். மேலும் தண்ணீர் வயிற்றில் வேகமாக செல்வதால் குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை பாதிக்கும்.

நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் வடிகட்டும் தன்மை பாதிக்கப்படும். இதனால் சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

உடலின் நீர் சமநிலை பாதிப்படைகிறது. இதன் காரணமாக மூட்டுகளில் பிரச்சனை ஏற்படலாம். மேலும் செரிமான கோளாறுகள் ஏற்படும்.

தண்ணீரை வாய் வைத்தே குடிப்பது நல்லது. மெல்ல மெல்ல தண்ணீர் வயிற்றுக்குள் செல்லுமாறு குடிப்பது மிக அவசியம். தண்ணீரை அவசர அவசரமாக குடிப்பதை முற்றிலும் தவிர்க்க  வேண்டும்.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.