வைட்டமின் குறைபாடா? பப்பாளியே தீர்வு.

பழங்களின் இராணி என்று பப்பாளி பழத்தை கொலம்பஸ் கூறுகிறார். இந்த பப்பாளி கனிந்தவுடன் அவ்வளவு அழகாக இருக்கும். நம்மில் சிலர் பப்பாளி என்றவுடன் முகம் சுளிப்பார்கள் ஆனால் அதில் தான் அதிக அளவு சுவையும், ஊட்டசத்துகள் நிறைந்து உள்ளது.அப்படி என்ன நன்மை உள்ளது என்பதை கீழே பார்க்கலாம்.

நமது உடலில் ஏதெனும் பிரச்சனை என்றால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவோம். அவர் ஊட்டச்சத்து குறைபாடு என்று சொல்லி சில மாத்திரைகளை தருவார் அதை உண்டு சரி பண்ணுவோம். ஆனால் ஊட்டசத்து குறைபாடுக்கு மிக எளிய தீர்வு பப்பாளி மட்டும் தான். பப்பாளியில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடென்ட், வைட்டமின் ஏ,சி, மற்றும் இ உள்ளது. நமது த்ற்போதைய உணவு பழக்கவழக்கங்களினால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் நிறைய சேர்ந்து இரத்தங்களுடன் இணைந்து இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன.இதை பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட் எளிதாக அகற்றும்.இரத்ததில் உள்ள கொழுப்புகளின் அளவை கட்டுபடுத்தும்.

மேலும் பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்னும் புரோட்டின் செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. இது செரிமான மண்டலத்தில் சரியாக நொதிக்காத உணவுகளை எளிதாக உடைத்து அதை செரிமானமாக்கும்.அதை அமினொ அசிட்டாக மாற்றி செரிமானத்தை விரைவு பண்ணுகிறது.இதனால் மலச்சிக்கல் குறைவதோடு பப்பாளியில் உள்ள நார்சத்துகள் உடலில் சேரும்.

உடலில் புண் மற்றும் அலர்ஜி போன்றவை இருந்தால், நீங்கள் பப்பாளி உண்டால் சரியாகிவிடும். ஏனென்றால் பப்பாளில் இந்த் பிரச்சனைகளை எதிர்த்து போராடும் பண்புகள் நிறைய உள்ளன.இதனால் பப்பாளியை மூட்டு கை கால் வழி உள்ளவர்கள் உண்டு வந்தால் நல்ல பலன் தெரியும்.

பப்பாளியில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளும் நிறைய உள்ளன.இந்த பழத்தில் உள்ள நார்சத்துக்கள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களான டாக்ஸின்களை உடலை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிடுகிறது.மேலும் பப்பாளியில் உள்ள போலட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின், வைட்டமின் சி புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

பப்பாளில் கலோரி குறைவாக உள்ளதால் டயட் மேற்கொள்வோர் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.நாமும் இத்தகைய நல்ல பண்புகளை கொண்ட பப்பாளியை உண்டு நலமுடன் வாழலாம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.