வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைக்கு தயிரை பயன்படுத்தும் முறை!

கோடை காலம் ஆரம்பித்து விட்டது. பலருக்கும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. கொளுத்தும் வெயிலிலும் சுற்றி திரிய வேண்டியிருக்கும். இதனால் சருமம் பல பிரச்சனைகளை சந்திக்கும். இதை தடுக்க தயிரை பயன்படுத்தலாம். தயிரை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லை சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். சருமத்திற்கு தயிரை பயன்படுத்தும் வழிமுறைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைக்கு தயிரை பயன்படுத்தும் முறை:-

  • 50 கிராம் அளவுள்ள தயிரை முகத்தில் பயன்படுத்தினால் அதில் உள்ள ஆஸ்ட்ரினண் எனும் பொருள் சரும செல்களின் வளர்ச்சியை அதிகரித்து கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் வராமல் பார்த்து கொள்ள முடியும்.
  • தயிரில் உள்ள கால்சியம் சத்துகள் சருமத்தில் தடவுவதன் மூலம் சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் தயிர் நமது சருமத்திற்கு தேவையான ஈரப்பசையை அளிக்கிறது.
  • தயிரில் உள்ள லேட்டிக் ஆசிட் சருமத்தில் சிறந்த மாய்ச்சுரைசராக செயல்பட்டு சரும சுருக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.
  • வெளியில் சுற்றி திரிவதால் ஏற்படும் சரும களைப்பை போக்க தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் சரும்ம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
  • தயிரை தினமும் முகத்தில் தடவி பேஸ் மாஸ்க் செய்தால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment