வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான வாஸ்து குறிப்புகள்!!

வீடு கட்டுவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிக அளவிலான பணத்தை செலவு செய்து உருவாக்க கூடிய ஒரு தங்கும் இடம் என்றே கூறலாம். இதை நமக்கு பிடித்த மாதிரி கட்டுவது முக்கியமல்ல வாஸ்து பகவானுக்கு பிடித்தமாதிரியாக கட்ட வேண்டும் அப்போது தான் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். வீடு கட்டுவதற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான வாஸ்து குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான வாஸ்து குறிப்புகள்:-

  • மேல்நிலை நீர்த் தொட்டி வைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதை, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடிப் பகுதியில் அமைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • மாட்டு தொழுவம் அமைப்பதென்றால் வடக்கு அல்லது வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைப்பது நல்லது.
  • நீங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இடமோ அல்லது வீடோ விலைக்கு வந்தால் வாங்குவது நல்லது. மாற்றாக தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
  • வீட்டில் தலைவாசலுக்கு நேர் குத்தலாக குளியலறை மற்றும் கழிப்பறையை அமைக்கக் கூடாது. அது மட்டுமில்லாமல் நடைப்பாதையிலும் கழிவறை அமைக்கக் கூடாது.
  • சமையல் அறைக்கு முன்னதாக வடக்கு அல்லது கிழக்கு திசையில் கழிப்பறை மற்றும் குளியலறை அமைத்தால் பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படக்கூடும்.
  • தெருவின் மட்டத்தை விட தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோயை ஏற்படுத்தும். எனவே தெருவின் மட்டத்தை விட உயரமாக வீட்டின் தளத்தை அமைக்க வேண்டும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.