வாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரம் என்றால் என்ன தெரியுமா?

வாஸ்து பகவான் பன்னிரெண்டு இராசியினரையும் பன்னிரெண்டு மாதங்களாக பிரித்து மாதத்திற்கு ஒரு இராசியில் படுக்கை நிலையில் சஞ்சரிக்கிறார். எனவே நீங்கள் வீடு கட்டும் போது வாஸ்து பகவானின் நிலையை என்னவென்று பார்க்க வேண்டும்.

வாஸ்துவிற்கு விஞ்ஞான பூர்வமான ஆதரங்களும் உள்ளதாக சிலர் கூறுகின்றனர். வாஸ்து பகவான் குறிப்பிட்ட நேரத்தில் விழித்து இருப்பார். அந்த சமயத்தில் அலுவலுகம் அல்லது வீடு கட்டுபவர்கள் எந்த தடங்கலும் இன்றி கட்டி முடிப்பது மட்டுமில்லாமல் அதில் குடியேறுபவர்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

வாஸ்து பகவான் விழித்திருக்கும் நேரம்:-

தை மாதம் – 12ம் தேதி காலை 9.47 மணி முதல் 11.47 மணி வரை,

மாசி மாதம் – 22ம் தேதி காலை 9.38 மணி முதல் 11.08 மணி வரை,

சித்திரை மாதம் 10ம் தேதி காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரை,

வைகாசி மாதம் 21ம் தேதி காலை 9.04 மணி முதல் 10.34 மணி வரை,

ஆடி மாதம் 11ம் தேதி காலை 8.02 மணி முதல் 9.32 மணி வரை,

ஆவணி மாதம் 6ம் தேதி மதியம் 2.24 மணி முதல் 3.54 மணி வரை,

ஐப்பசி மாதம் 11ம் தேதி காலை 6.50 மணி முதல் 8.20 மணி வரை,

கார்த்திகை மாதம் 8ம் தேதி காலை 10.11 மணி முதல் 11.41 மணி வரை.

இந்த நேரத்தை கருத்தில் கொண்டு புதிய மனைகள் கட்டும் பணியை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.