வாழை பழ தோல் பயனுள்ளது தெரியுமா உங்களுக்கு?

குதிங்காலில் வரும் சிரங்குகள் வெடிப்புகளுக்கு வாழை பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை காலில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வர வெடிப்புகள் சிரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை காணலாம்.

ரத்தம் கட்டுதல், வீக்கம் உள்ள இடங்களிலும் வாழை பழ தோலை மெதுவாக தடவி பயன்படுத்த வீக்கம் குறைந்து பழைய நிலைக்கு மாறும்.

முகத்தில் வர கூடிய சுருக்கம், பரு, வீக்கம் அனைத்திற்கும் வாழை பழ தோலை மிருதுவான முறையில் தடவி பின் தண்ணீரால் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ளவை அனைத்தும் நீங்கி அழகான தோற்றத்தை காட்டும்.

பூச்சி கடிகளால் ஏற்படும் வீக்கம், அலற்சி அனைத்திற்கும் இதை பூச பழைய மாதிரி மாறி விடும்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு வாழை  பழ தோலின் உட்புறத்தில் இருப்பதை மேலோட்டமாக எடுத்து சாப்பிட நல்லது.

முகத்தில் குழி மற்றும் மரு போன்றவை ஏற்படும் இடங்களில் தோலில் உள்ள சாற்றை  பயன்படுத்துவதன் மூலம் அது மறைந்து சரிசம நிலையை அடையும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment