வாகன இன்சூரன்ஸ் எதற்கெல்லாம் என்று தெரியுமா?

இன்சூரன்ஸ் என்றால் பெரும்பாலும் எல்லோரும் நினைப்பது காரில் செல்லும் போது ஏதேனும் சேதம் ஏற்பட்டால் ஏற்படும் இழப்பை தவிர்ப்பதற்கு என்றே எண்ணுவர். அதற்கும் அதிகமான சில பயன்களை கொண்டுள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.

 நன்மைகள்:

  • இயற்கையால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கும் இது பயன்படுகிறது.
  • உங்கள் வாகனம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டாலும் கூட அந்த பாதிப்பை அந்த நிறுவனம் வழங்கும்.
  • காரின் மீது மரம் சாய்ந்தால் அதை படம் எடுத்து அந்தந்த நிறுவனத்திற்கும், டீலருக்கும் அனுப்ப வேண்டியது அவசியம்.
  • மழை நீர் என்ஜினில் புகுந்தால் காரை ஸ்டார்ட் செய்யாமல் புகைப்படம் எடுத்து நிறுவனதிற்கு அனுப்ப வேண்டும்.
  • எஞ்சினுக்கான கூடுதலான திட்டத்தை சேர்த்து இன்சூரன்ஸ் போட வேண்டும். இதன் மூலம் அதிகபட்சமான தொகையை இழப்பீடாக பெற முடியும்.
  • சாதாரண திட்டத்தில் இழப்பீடு தொகை குறைவாகவே வழங்குவார்கள். திட்டத்தின் தொகை அதிகமாக இருந்தால் கூடுதல் பலன் அளிக்கும்.

குறைந்த தொகையை சேர்த்து இருந்தால் பெரும்பாலும் மரம் இல்லாத இடங்கள், தாழ்வான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தாமல் இருப்பது நலம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment