இரட்டை குழந்தைகளை பெற்றெடுப்போர் சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். அதிலும் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டு இருப்பவர்கள் சாப்பாடு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த உணவு சாப்பிட்டாலும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். அவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளை இப்போது பார்க்கலாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:-

பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துகளை வழங்க முடியும்.

முடிந்த அளவு பால் அதிகமாக சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 5 முதல் 6 டம்ளர் வரை பால் சாப்பிட வேண்டும். தயிர் சாப்பிட வேண்டும். அதில் உள்ள கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

மெர்க்குரி குறைந்த மீன் சாப்பிடலாம். இல்லையெனில் அதை தவிர்ப்பது நலம். கொண்டைக்கடலையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. அதனால் இதை அதிகம் சாப்பிடலாம்.

தினமும் முட்டை சாப்பிடுவது நல்லது. குழந்தைக்கு தேவையான புரோட்டீனை இது வழங்குகிறது. கீரையில் இரும்பு சத்து உள்ளது. அதனால் அதை தவறாமல் உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.