மஞ்சளை நீரில் கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

மஞ்சள் எளிதில் கிடைக்க கூடிய ஒரு பொருள் தான். இது பெரும்பாலும் சமையல் மற்றும் பெண்கள் முகத்தில் பயன்படுத்தி பார்த்து இருப்போம். அதற்கும் மேலாக கிருமி நாசினியாக பயன்படுத்தலாம் என எல்லோருக்கும் தெரியும். உங்களுக்கு தெரியாத பிற பயன்களை இப்போது பார்க்கலாம்.

மஞ்சள் நீர் தயாரிக்கும் முறை:-

மஞ்சள் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து நீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மஞ்சள் பொடியை நீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். குளிர்ச்சியாக குடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஐஸ் கட்டிகளை அதனுடன் சேர்த்து குடிக்கலாம்.

நன்மைகள்:-

  • மஞ்சளில் உள்ள ஆண்டி – ஆக்ஸிடெண்டுகள் ஆர்த்ரைடிஸ் மூட்டுவலி மற்றும் கால் வீக்கத்தை சரி செய்யும் தன்மை கொண்டது.
  • அல்சைமர் எனப்படும் நோயை சரி செய்ய இந்த நீரை பயன்படுத்தலாம். இதை தொடர்ந்து குடித்தால் மூளைகளின் செயல் திறன் அதிகரிக்கும்.
  • மஞ்சளில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் ப்ரீ ரேடிகல்ஸை எதிர்த்து போராடி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படக்கூடிய உப்பிசம், நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்கிறது.
  • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க இது உதவுகிறது.மஞ்சள் நீருடன் சிறிதளவு மிளகு பொடி சேர்த்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தப்படும்.
  • உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் சரி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகலை வெளியேற்றி நோய் தொற்றுகள் ஏற்படாமல் சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள உதவுகிறது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.