மஞ்சளை சரும பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்தலாம்?

சில வருட காலத்திற்கு முன்னதாக பெண்கள் அனைவரும் மஞ்சள் பூசி குளித்து வந்தனர். இதனால் அவர்களின் முகத்தில் எந்த வித பிரச்சனையும் இருக்காது. இப்போது பல்வேறு வகையான கிரீம்களை பயன்படுத்துவதால் முகப்பரு, முகச்சுருக்கம் போன்றவை  ஏற்படுகிறது. மஞ்சளில் அதிகப்படியான ஆண்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. சிறிதளவு நீரில் மஞ்சளை சேர்த்து குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.

சரும பிரச்சனைக்கு மஞ்சளை பயன்படுத்தும் முறை:-

  • முகப்பருவினால் பாதிக்கப்பட்டால் சந்தன பொடியுடன், ம்ஞ்சள் தூள் சேர்த்து பசையாக்கி முகத்தில் தடை காய்ந்ததும் கழுவினால் பருக்கள் மறையும்.
  • மஞ்சள் தூள், கடுகு எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் அலசினால் பருக்கள் முற்றிலுமாக மறையும்.
  • வெள்ளரிக்காய் சாறுடன் மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும். இந்த பேஸ் பேக்கை தினமும் கூட செய்யலாம்.
  • கரும்பு சாறுடன் மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தடவினால் சரும சுருக்கம் மறையும். சென்சிடிவ் சருமம் இருப்பவர்கள் மோருடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சுருக்கம் உள்ள இடங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரினால் கழுவினால் இந்த பிரச்சனை சரியாகும்.
  • தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூள் சேர்த்து பாதங்களில் உள்ள வெடிப்பின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் வெடிப்பு மறைந்து பாதம் மென்மையாக மாறும்.
  • பாலுடன் மஞ்சள் தூள் கலந்து உதட்டில் தடை மசாஜ் செய்தால் உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்கி அழகானதாக தோற்றமளிக்கும்.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.