சரும பிரச்சனைக்கு மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம்?

பெண்கள் தங்களது முகத்தை எப்போதும் அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் முகப்பர், கரும்புள்ளி, எண்ணெய் பசை போன்றவற்றால் அழகு கெடக் கூடும். எண்ணெய் பசையால் சருமத்தில் உள்ள துளைகள் மறைக்கப்பட்டு முகப்பருக்கள் உருவாகின்றன. இப்போது சரும பிரச்சனைக்கு மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

மஞ்சள் பொடி பேஸ்பேக் செய்யும் முறை:-

கடைகளில் கிடைக்கும் மஞ்சள் பொடியினை பயன்படுத்துவதற்கு பதிலாக மஞ்சள் கிழங்கு வாங்கி அரைத்து கிடைக்கும் மஞ்சள் கிழங்கை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் கடைகளில் விற்கப்படும் மஞ்சள் பொடியில் இரசாயணம் கலந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.

ஒரு பவுலில் யோகர்ட்டை எடுத்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். பின்னர் தேன் மற்றும் தேங்காய் எண்ணெயை கலக்கி அதில் மஞ்சள் பொடியை சேர்த்து பசை போல மாற்றி கொள்ள வேண்டும். இதை அப்படியே முகத்திற்கு தடவி 20 நிமிடம் கழித்து இதமான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

வாரம் ஒருமுறை இந்த வழிமுறையை பின்பற்றினால் முகம் அழகாகும். முகப்பரு, சருமத்தில் உள்ள அழுக்கு, கருமை எல்லாம் நீங்கி பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.