சளி, இருமலை விரட்ட சில வீட்டு வைத்தியம்

சளி மற்றும் இருமல் வரக் காரணம்:

பொதுவாக நம்மில் சிலருக்கு பனிக்காலமோ அல்லது மழைக்காலமோ திடீரென ஏற்படும் மாற்றத்தின் காரணமாக இது உருவாகிறது. அதை விரட்ட சில எளிய வழிகளை பார்க்கலாம்.

  • ஆரஞ்ச் ஜூஸ், தேன் சிறிது உப்பு சேர்ந்த கலவையை குடித்தால் இருமலை நீக்கலாம்.
  • கொய்யாப்பழம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று அதனை மிளகு பொடி சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நுரையிரலில் உள்ள சளியை நீக்கலாம்.
  • இரவு தூங்குவதற்கு முன்னால் பாலில் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் சளி மற்றும் இருமல் தொல்லையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
  • வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் இருமல், சளி விலகும்.
  • வெற்றிலை சாறும், தேனும் கல்ந்து சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • இரவில் தூங்கும் முன்னர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் இருமல் வராமல் தடுக்கலாம்.
  • கற்பூர வள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி அந்த நீரை குடிப்பதன் மூலம் சளியிலிருந்து உடனடியாக விடுபடலாம்.
  • Add Your Comment