சருமம் பொலிவு பெற

பாரம்பரிய அழுகு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.அவற்றில் சில குறிப்புகளை பார்போம்

  1. மஞ்சள் மற்றும் தயிர்

தயிரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.

 

  1. தேங்காய் எண்ணெய்

கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுதுவதற்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் சரும செல்களுக்கு சத்துகள் கிடைப்பதோடு, வறண்ட சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 

  1. கற்றாழை

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசி சுமார் ½ மணி நேரம் ஊறவிட்டு அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதன் மூலம் கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணங்களால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்பட்டு, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சருமத்தின் அழகும் அதிகரிக்கும்

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment