துர்க்கை அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 மந்திரங்கள்!

துர்க்கையை வழிபட்டால் வாழ்வில் எல்லா துன்பங்களும் மறைந்து போகும். துர்க்கையை வணங்கும் முன்னர் சில வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல பலனை அடையலாம்.

  1. ஓம்அகிலாண்ட நாயகியே போற்றி
  2. ஓம்ஆதி பராசக்தியே போற்றி
  3. ஓம்அபிராமியே போற்றி
  4. ஓம்ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி
  5. ஓம்அம்பிகையே போற்றி
  6. ஓம்ஆசைகளை அறுப்பாய் போற்றி
  7. ஓம்அன்பின் உருவே போற்றி
  8. ஓம்ஆபத்தைத் தடுப்பாய் போற்றி
  9. ஓம்அச்சம் தீர்ப்பாய் போற்றி
  10. ஓம்ஆனந்தம்அளிப்பாய் போற்றி
  11. ஓம்அல்லல்தீர்ப்பாய் போற்றி
  12. ஓம்ஆற்றல்தருவாய் போற்றி
  13. ஓம்இமயவல்லியேபோற்றி
  14. ஓம்இல்லறம்காப்பாய் போற்றி
  15. ஓம்இருசுடர் ஒளியே போற்றி
  16. ஓம்இருளைநீக்குவாய் போற்றி
  17. ஓம்ஈசனின்பாதியே போற்றி
  18. ஓம்ஈஸ்வரியேபோற்றி
  19. ஓம்உமையவளேபோற்றி
  20. ஓம்உளைமான்கொண்டாய் போற்றி
  21. ஓம்உள்ளரவம்தீர்ப்பாய் போற்றி
  22. ஓம்உற்சாகம்அளிப்பாய் போற்றி
  23. ஓம்ஊழ்வினைதீர்ப்பாய் போற்றி
  24. ஓம்ஊக்கம்அளிப்பாய் போற்றி
  25. ஓம்என்துணை இருப்பாய் போற்றி
  26. ஓம்ஏக்கம்தீர்ப்பாய் போற்றி
  27. ஓம்எம்பிராட்டியேபோற்றி
  28. ஓம்ஏற்றம்அளிப்பாய் போற்றி
  29. ஓம்ஐமுகன்துணையே போற்றி
  30. ஓம்ஐயுறுதீர்ப்பாய் போற்றி
  31. ஓம்ஒளிர்வுமுகத்தளவே போற்றி
  32. ஓம்ஓச்சம்அளிப்பாய் போற்றி
  33. ஓம்கங்காணியேபோற்றி
  34. ஓம்காமாட்சியேபோற்றி
  35. ஓம்கடாட்சம்அளிப்பாய் போற்றி
  36. ஓம்காவல்தெய்வமே போற்றி
  37. ஓம்கருணைஊற்றே போற்றி
  38. ஓம்கற்பூரநாயகியே போற்றி
  39. ஓம்கற்பிற்கரசியேபோற்றி
  40. ஓம்காமகலா ரூபிணியே போற்றி
  41. ஓம்கிரிசையேபோற்றி
  42. ஓம்கிலியைத்தீர்ப்பாய் போற்றி
  43. ஓம்கீர்த்தியைத்தருவாய் போற்றி
  44. ஓம்கூர்மதிதருவாய் போற்றி
  45. ஓம்குவலயம்ஆள்பவளே போற்றி
  46. ஓம்குலத்தைக்காப்பாய் போற்றி
  47. ஓம்குமரனின்தாயே போற்றி
  48. ஓம்குற்றம்பொறுப்பாய் போற்றி
  49. ஓம்கொற்றவையேபோற்றி
  50. ஓம்கொடுந்துயர்தீர்ப்பாய் போற்றி
  51. ஓம்கோமதியேபோற்றி
  52. ஓம்கோன்ரிவாகனம்கொண்டாய் போற்றி
  53. ஓம்சங்கரியேபோற்றி
  54. ஓம்சாமுண்டேஸ்வரியேபோற்றி
  55. ஓம்சந்தோஷம்அளிப்பாய் போற்றி
  56. ஓம்சாந்தமனம் தருவாய் போற்றி
  57. ஓம்சக்திவடிவே போற்றி
  58. ஓம்சாபம்களைவாய் போற்றி
  59. ஓம்சிம்மவாகனமே போற்றி
  60. ஓம்சீலம்தருவாய் போற்றி
  61. ஓம்சிறுநகை புரியவளே போற்றி
  62. ஓம்சிக்கலைத்தீர்ப்பாய் போற்றி
  63. ஓம்சுந்தரவடிவழகியே போற்றி
  64. ஓம்சுபிட்சம்அளிப்பாய் போற்றி
  65. ஓம்செங்கதிஒளியே போற்றி
  66. ஓம்சேவடிபணிகிறேன் போற்றி
  67. ஓம்சோமியேபோற்றி
  68. ஓம்சோதனைதீர்ப்பாய் போற்றி
  69. ஓம்தண்கதிர் முகத்தவளே போற்றி
  70. ஓம்தாயேநீயே போற்றி
  71. ஓம்திருவருள்புரிபவளே போற்றி
  72. ஓம்தீங்கினைஒளிப்பாய் போற்றி
  73. ஓம்திரிபுரசுந்தரியேபோற்றி
  74. ஓம்திரிசூலம்கொண்டாய் போற்றி
  75. ஓம்திசையெட்டும்புகழ் கொண்டாய் போற்றி
  76. ஓம்தீரம்அளிப்பாய் போற்றி
  77. ஓம்துர்க்கையே! அம்மையே போற்றி
  78. ஓம்துன்பத்தைவேரறுப்பாய் போற்றி
  79. ஓம்துணிவினைத்தருவாய் போற்றி
  80. ஓம்தூயமனம்தருவாய் போற்றி
  81. ஓம்நாராயணியேபோற்றி
  82. ஓம்நலங்கள்அளிப்பாய் போற்றி
  83. ஓம்நிந்தனைஒழிப்பாய் போற்றி
  84. ஓம்பகவதியேபோற்றி
  85. ஓம்பவானியேபோற்றி
  86. ஓம்பசுபதிநாயகியே போற்றி
  87. ஓம்பாக்கியம்தருவாய் போற்றி
  88. ஓம்பிரபஞ்சம்ஆள்பவளே போற்றி
  89. ஓம்பிழைதீர்ப்பாய் போற்றி
  90. ஓம்புகழினைஅளிப்பாய் போற்றி
  91. ஓம்பூஜிக்கிறேன்துர்க்கா போற்றி
  92. ஓம்பொன்னொளிமுகத்தவளே போற்றி
  93. ஓம்போர்மடத்தைஅளிப்பாய் போற்றி
  94. ஓம்மகிஷாசூரமர்த்தினியேபோற்றி
  95. ஓம்மாதாங்கியேபோற்றி
  96. ஓம்மலைமகளேபோற்றி
  97. ஓம்மகாமாயிதாயே போற்றி
  98. ஓம்மாங்கல்யம்காப்பாய் போற்றி
  99. ஓம்தவன்தங்கையே போற்றி
  100. ஓம்மனக்குறை தீர்ப்பாய் போற்றி
  101. ஓம்மண்ணுயிர் காப்பாய் போற்றி
  102. ஓம்வேதவல்லியே போற்றி
  103. ஓம்வையம் வாழ்விப்பாய் போற்றி
  104. ஓம்ஜெயஜெய தேவியே போற்றி
  105. ஓம்ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
  106. ஓம்ஜெயஜெய தேவியே போற்றி
  107. ஓம்ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
  108. ஓம்துர்க்காதேவியே போற்றி
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.