செப்டம்பர் 2-ந் தேதி குரு ஜென்மத்தில் துலாம் ராசிக்கு வரப்போகிறதால் எண்ணற்ற மாற்றங்கள் நிகழும். போட்டிகள் அதிகரிக்கலாம், வரவு ஏற்ற செலவுகளும் இருந்து கொண்டே இருக்கும்.
ஜென்மத்தில் இருக்கும் குருவால் ராமர் வனவாசம் சென்றார், துலாம் ராசியினருக்கு இந்த குரு கொடுப்பாரா அல்லது கெடுப்பாரா என்று பார்ப்போம். ஒன்பது கிரங்களில் குரு ஒரு சுபா கிரகம் என்பதால் இருக்கும் இடத்தை விட அவர் பார்வைக்கு பலம் அதிகம்.
குரு ஐந்தாம் பார்வையால் உங்கள் ஐந்தாம் வீட்டையே பார்ப்பதால் தெளிவு பிறக்கும். எதிர்பாராத நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளம், இடமாற்றம், முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும், தடைபட்ட திருமணம் நன்கு நடைபெறும்.
குரு ஏழாம் பார்வையாக ஏழாம் வீட்டையே பார்ப்பதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஒன்பதாம் வீட்டின் பார்வை தடையின்று அணைத்து காரியங்களும் நடைபெறும்.
வகர சஞ்சாரம் 14-2-2018 முதல் 10-4-2018 நடைபெறுவதால் நோயிலிருந்து விடுபடுவீர்கள், ஆரோக்கியம் சீராகும். துலாம் ராசியினருக்கு குரு வக்ரத்தில் இருப்பதால் யாரும் புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் தோன்றும்.
காதல் விவகாரத்தில் தள்ளி வைத்து எதிர்காலத்தை சிந்தியுங்கள். நேரம் நல்லதாக அமையும் பொழுது கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, மனை போன்றவற்றில் பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த குரு பெயர்ச்சி உங்களை சோதித்தாலும் சுற்றியிருப்பவர்களை புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.
பரிகாரம்:
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்திக்கு ஐந்து நெய் தீபம் ஏற்றினால் தடை விலகும். திருமண தடை விலகும் இல்லத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும்.