தக்காளி சூப் சாப்பிடுங்க நீங்களும் ஸ்டார்ங்க் ஆகுங்க!

இன்றைய காலத்தில் சூப் பிடிக்காதவர்கள் என்று பெரும்பாலும் இருக்கமாட்டார்கள்.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக உண்ண கூடாது என்பதற்காகவே சூப் குடிக்கும் பழக்கத்தை பழகியுள்ளனர்.

சூப்களில் வகைவகையாய் நிறைய உள்ளன. அதிலும் தக்காளி சூப் சைவப்பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதகமாக அமைந்துள்ளது.இதில் அதிக அளவு ஊட்டச்சத்துகளும் பயன்களும் நிறைந்துள்ளது அவை என்னென்ன என்பதை படித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்

  • தக்காளி சூப் தயாரிக்கும் மூல பொருளான தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவு.இந்த தக்காளியானது உடலில் கொழுப்பு சேராமல் தடுப்பதோடு அதிக அளவு கலோரியை எரித்துவிடுகிறது.இந்த தக்காளி சூப்பை ஆலிவ் ஆயிலுடன் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாவதோடு டயட் மேற்கொள்பவர்களுக்கு டயட் ஆகவும் அமையும். தக்காளியில் நீர்சத்தும் நார்சத்தும் அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
  • மேலும் இந்த சூப் சிவப்பு நிற தக்காளியால் செய்யப்படுவதால் புற்றுநோய்க்கு சிறந்தது. தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது ஆண்களுக்கும், பெண்களுக்கும் புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும்
    இதனை தினமும் உண்டு வருவோருக்கு மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல புற்றுநோய்கள் வராமல் தடுக்க இயலும்.
  • இது இரத்த அழுத்தம் வராமல் தடுப்பதோடு கெட்ட கொழுப்புகளையும், இதய நோய் மற்றும் இதய கோளாறுகளையும் தடுக்கும்.இதில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது.
  • புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை விட முடியாமல் தவிப்பவர்கள் தக்காளி சூப் உண்டால் அதில் உள்ள கார்சினொஜென்னின் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் உடலில் உண்டாகும் அழிவை குறைக்கும்.
  • இந்த தக்காளி சூப்பை தினமும் உண்டு வந்தால் முகம் பளபளப்பாவதுடன் மேனி மிருதுவாகும்.எலும்புகள் மற்றும் கண்பார்வைக்கான வைட்டமின் கே, வைட்டமின் ஏ உள்ளது.

எனவே இந்த தக்காளி சூப்பை தினமும் உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.