முன்னோரை வழிபடும் தலங்கள்

இராமேஸ்வரத்தில் உள்ள 64 தீர்த்தங்களில் ஒன்றான அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீக்கும்

திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் காவேரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அபரி விதமான பலங்கள் கிடைக்கும்.

கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.

சென்னை மயிலாப்பூர் காபலீஸ்வரர் கோவில் திருக்குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டால் அவரது வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம்

கும்பகோணம் மாகமகக் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான தர்மம் செய்தால் நன்மைகள் உண்டாகும்.

காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி பெருமாள் தலத்தில் முன்னோர்களுக்கு திதி செய்து வழிப்பட்டால் திருமாலின் திருவருள் கிடைக்கும்

காசியின் அருகில் உள்ள விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டால் மகத்தான புண்ணியங்களை பெறலாம்

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment