பற்கள், ஈறுகளின் வலிமையை அதிகரிக்க உதவும் எண்ணெய்கள்!

பற்களை முறையாக பராமரிக்காமல் விட்டால் பற்கள் மற்றும் ஈறுகளில் வலி ஏற்படக்கூடும். வலி ஏற்படும் போது மட்டுமே நாம் மருத்துவரை சந்திக்க செல்வோம். அவர்கள் நம்மிடம் இருக்கும் மொத்த பணத்தையும் வாங்கிவிடுவார்கள். இந்த நிலைமைக்கு பதிலாக முன் கூட்டியே பற்களை முறைப்படி பராமரிக்க வேண்டும். இல்லேயேல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல்மருத்துவரிடம் சென்று பல்லை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதற்கான செலவு மிகக்குறைவு தான். பற்கள் மற்றும் ஈறுகளின் வலிமையை அதிகரிக்கும் எண்ணெய்களை பற்றி இப்போது பார்த்து கொள்ளலாம்.

பற்கள், ஈறுகளின் வலிமையை அதிகரிக்க உதவும் எண்ணெய்கள்:-

  • கிராம்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை பல் தேய்க்கும் போது பயன்படுத்தலாம். அல்லது வாய் கொப்பளிக்கும் போது நீரில் 1 சொட்டு சேர்த்து அதை பயன்படுத்தினால் கிருமிகளின் தாக்கம் இல்லாமலும் வாய் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
  • பட்டை எண்ணெய் இதையும் 2 சொட்டு நீரில் சேர்த்து வாயை கொப்பளித்தால் பற்களில் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
  • புதினா எண்ணெயை பல் தேய்க்கும் போது பயன்படுத்தினால் அதில் உள்ள மைக்ரோபியல் தன்மை வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
  • சேஜ் மூலிகையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் வாயின் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, ஈறுகளில் ஏற்படும் பிரச்சனையை உடனடியாக நீக்க கூடியது.
  • நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்தி பல் தேய்த்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.