உங்கள் உடலில் இரத்தம் குறைவாக உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி தெரியுமா?

உடலில் ஏற்படும் எல்லா பிரச்சனைக்கும் அறிகுறிகள் பொதுவானதாக மட்டுமே இருக்கும். அறிகுறிகள் ஏற்படும் போதே கண்டு கொள்ளாமல் விட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடலில் இரத்தம்  குறைவாக உள்ளதை உணர்த்தும் அறிகுறிகளை இப்போது பார்க்கலாம்.

உடலில் இரத்தம் குறைவாக உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்:-

  • உங்கள் தோல் வெள்ளையாகவும், சற்று வீக்கத்துடனும் காணப்பட்டல் உங்களது உடலில் இரத்தம் குறைவாக உள்ளது என அர்த்தம்.
  • அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டால் இதயத்தில் தான் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். இதயம் கடினமான மற்றும் அதிகமான வேலையை இரத்தம் குறைவாக இருக்கும் போது செய்ய வேண்டியதாக இருந்தால் நெஞ்சு வலி ஏற்படும்.
  • அல்சரினால் அவஸ்தைப் பட்டால் உடலினுள் அதிகப்படியான இரத்த கசிவு ஏற்படும். இதன் காரணமாக இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம்.
  • அடிக்கடி இதய படபடப்பை உணர்ந்தால் உடலில் இரத்தம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஏனெனில் இதயத்திற்கு போதிய அளவு இரத்தம் கிடைக்காமல் அழுத்தம் ஏற்படும் போது படபடப்பை உணர்த்துகிறது.
  • நகம் அடிக்கடி எளிதில் உடைந்தால் இரத்த சோகை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.