இரும்பு சத்து குறைபாடு உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்!

உடலில் இரத்த ஓட்டம் தான் எல்லா பகுதிகளுக்கும் சத்தை அளிக்கிறது. இரத்த உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகவும் முக்கியம். உடலில் ஒவ்வொரு மூலக்கூறும் இரும்புடன் சேர்ந்து ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. ஹீமோகுளோபின் தான் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை கடத்தி செல்கிறது. ஹீமோ குளோபினின் அளவு குறைந்தால் இரத்த சோகை உருவாகிறது. இரும்பு சத்து குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகளை இப்போது பார்க்கலாம்.

இரும்பு சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:-

  • மண்ணை சாப்பிட தோன்றுவது இரும்புச் சத்தின் அறிகுறியாகும். இதற்கு காரணம் அதிலுள்ள இரும்புச் சத்தின் ஈர்ப்பினால் கூட இருக்கலாம். பென்சீல், சாக்பீஸ் சாப்பிடுவதும் இதன் அறிகுறிகளாகும்.
  • கைகள் மற்றும் கால்களில் உள்ள நகங்கள் வளைந்து ஸ்பூன் போன்று காணப்படும். இதற்கு கொய்லானிசியா என்று பெயர். இப்படி இருந்தால் இரும்பு சத்து மட்டுமில்லாமல் மற்ற நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். எனவே, மருத்துவரை சந்திப்பது நல்லது.
  • குளிர் காலத்தில் ஒருவருக்கு உதடு வெடித்து காணப்படுவது இயல்பான ஒன்று ஆனால் எல்லா சமயத்திலும் உதடு வெடித்தபடியே இருந்தால் இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறியாகும்.
  • நாக்கு சற்று வீங்கியது போலவும் பளபளப்பாகவும் இருந்தால் அது இரும்புசத்து குறைபாடாக கூட இருக்கலாம்.
  • ஐஸ் கட்டியை பார்த்தால் சாப்பிட தோன்றுவது கூட இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் தான்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.