சுத்தமான நெய்யின் நன்மைகள்!!!!!!!!!!

நம்ம வீட்டுல பண்டிகைய இருந்தாலும் சரி இல்ல எதாவது விஷேசமா இருந்தாலும் சரி.கண்டிப்பாக நெய் பலகாரம் இருக்கும்.

நெய் அளவோடு உண்டால் நன்மைபயக்கும் அதுவே அளவுக்கு அதிகமாக உண்டோமேயானால் அது கேடுவிளைக்கும் பொருளாக மாறிவிடும்.சுத்தமான நெய்யில் பேடிக் ஆசிட், சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89% குறைவாக உள்ளது. என ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இப்பொழுது நெய்யின்  நன்மைகள் என்னென்ன என்று பார்கலாமா!!

 

சுத்தமான நெய்:

இன்றைய காலகட்டத்தில் கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான பொருட்க்கள் கலப்படம் மிக்கவையே. ஆகவே நமது வீட்டில் செய்யப்படும் நெய்தான் சுத்தமானது.இந்த சுத்தமான நெய்யை யார் எல்லாம் சாப்பிடலாம் யாரெல்லாம் சாப்பிட கூடாது என பார்க்கலாம்.

 

  • இதய நோய் , உடல் பருமன் ஆக இருப்பவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும்.
  • உடல் பருமன் இல்லாமல் இருப்பர்வர்கல் உண்ணலாம்.
  • சுத்தமான நெய்யை ஒரு நாளுக்கு 10-15 கிராம் மட்டுமே உண்ண வேண்டும்.

சுத்தமான நெய் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்

  • நிதமும் நெய்யை உடலில் சேர்த்து வந்தால் உடலும் மனமும் வலுவடையும்.உடல் ஆரோக்கியமாக இருக்கும். சுத்தமான நெய் சாப்பிட்டால் அவை உடலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றிவிடும்.பார்வைகள் மேம்படும்.
  • கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு நெய் ஒரு நல்ல ஆகாரம் வெண்ணெயில் உள்ள கொழுப்புச்சத்தைக் காட்டிலும் நெயில் கொழுப்புச்சத்து மிகக்குறைவு.இதனால் இது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.
  • சுத்தமான நெய் எளிதில் கெடாது.அகவே இதை ப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • நெய்யை உண்டு தினமும் உடற்ப்பயிற்ச்சி செய்தால் உடல் எடை குறையும்.செரிமான மண்டலத்தை சீராக இயக்கும்.
  • சுத்தமான நெய்யில் எளிதில் கரைந்துவிடும் வைட்டமின்களான கே, டி, ஈ மற்றும் ஏ உள்ளது ஆகவே தான் உடல் எடை அதிகரிக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • சமையலில் எண்ணெய் விட நெய்யே சிறந்தது, ஏனெனில் எண்ணெய் அதிக வெப்பநிலையில் கருகிவிடும். ஆனால் நெய் அப்படி ஆவதில்லை எப்பொழுதும் வாசனையுடன் இருக்கும்.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.