முடி அடர்த்தியாக வளர சில எளிய குறிப்புகள்!

முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளர வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவர்கள். இதற்கு முக்கியமாக சில உணவு பொருள்களும் சாப்பிட வேண்டியது அவசியமாகும். இயற்கையான சில பொருள்களை பயன்படுத்தி முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

முடி அடர்த்தியாக வளர சில எளிய குறிப்புகள்:-

  • தலை முடி அதிகமாக வளர வாரம் ஒரு முறை வெண்ணெயை தலைக்கு தடவி 1 – 2 மணி நேரம் கழித்து குளித்தால் அதிக அடர்த்தியுடன் முடி வளரும்.
  • கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இரண்டையும் ஒன்றாக அரைத்து அந்த கலவையுடன் தயிர் சேர்த்து தலையில் தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
  • கடுக்காய், செவ்வரத்தம், பூ, நெல்லிக்காய் நான்கையும் சம அளவில் எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
  • தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டி வேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அக்கலவையை வெயிலில் 5 நாள்கள் காய வைத்து பின்னர் எண்ணெயை மட்டும் பிரித்து எடுத்துவிட்டு குளிப்பதற்கு முன்னர் தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிர்வு குறைந்து அடர்த்தியாக வளரும்.
  • கடலை மாவுடன் வினிகரை சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து தலையை அலசினால் பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.