உடலில் உள்ள புழுக்களை விரட்ட உதவும் மூலிகை டீ பற்றி தெரியுமா?

சில ஒட்டுண்ணிகள் மனித உடலிலும் சரி, விலங்குகளின் உடலிலும் சரி ஒட்டிக் கொண்டே வாழும். ஒட்டுண்ணி புழுக்கள் மனித உடலில் இருந்தால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே ஆரம்பத்திலே உடலில் உள்ள புழுக்களை அறிந்து கொண்டு வெளியேற்றுவது நல்லது.

உடலில் புழுக்கள் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:-

  • உடலில் அங்காங்கே அரிப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல் காய்ச்சல் ஏற்படும்.
  • உடலில் தேவையில்லாமல் வீக்கம் ஏற்படுவது வாந்தி ஏற்படுவது
  • இதய துடிப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக துடிப்பது தலைவலி
  • தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக இருமல் மற்றும் மூச்சு விட சிரமமாக இருப்பது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

இயற்கை டீ தயாரிக்கும் முறை:-

உடலில் உள்ள புழுக்களை அழிக்க உதவும் டீ தயாரிக்க பூண்டு மற்றும் இஞ்சி மட்டுமே போதுமானது. இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக்கி நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரிரு நிமிடம் கழித்து அந்த நீருடன் பூண்டு சேர்த்து கொதிக்க விட வேண்டும். சிறிது நேரம் கழித்து வடிகட்டினால் தேநீர் தயார்.

தயாரிக்கப்பட்ட தேநீரை தினமும் சாப்பிடுவதற்கு முன்னர் பருகி வந்தால் உடலில் உள்ள ஒட்டுண்ணி புழுக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும். இதன் மூலம் உடல் சுத்தமாகும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.