அழுகிய தேங்காயை உடைப்பது நல்ல சகுணமா? அபசகுணமா?

சாமிக்கு பூஜை செய்வதிலிருந்து வீட்டில் எந்த ஒரு சடங்கு சம்பிரதாயமாக இருந்தாலும் தேங்காய் முக்கிய பங்கு  வகிக்கிறது. தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும். அது முறையே பிரம்மன், லக்ஷ்மி, சிவன் என கருதப்படுகிறது. வீட்டிலோ அல்லது கோவிலிலோ பூஜைக்கு கொடுத்த தேங்காய் உடைக்கும் போது அழுகிய நிலையில் இருந்தால் நல்ல சகுணமா? அல்லது கெட்ட சகுணமா? என்பதை பார்க்கலாம்.

நல்ல சகுணமா? அபசகுணமா?:-

பொதுவாக தேங்காய் உள்ளத்தின் சுத்தத்தை வெளிப்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. அழுகிய தேங்காய், தேங்காய் கோணலாக உடைவது போன்ற செயல்கள் கெட்ட சகுணமாகவும், சிதறு தேங்காய் போடும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது போன்றவை நல்ல சகுணமாக பிரித்து பார்க்கின்றனர்.

தேங்காய் உடைக்கும் போது அழுகிய தேங்காய் வருவது நல்ல அறிகுறி தான். நம்மை நெருங்கி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண் திருஷ்டி, போன்றவையும் நம்மை விட்டு அகலும் என்று கூறப்படுகிறது.

நீங்கள் உடைக்கும் தேங்காய் கொப்பரை காயாக இருந்தால் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் பணவரவு, எதிர்பாராத லாபம், போன்ற நல்லதே நடக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment