சொந்த வீடு கட்டனுமா அப்படின்னா ஒரு முறை இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க!!

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது ஏழைக் குடும்பமாக இருந்தாலும் சரி, நடுத்தர குடும்பத்துக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. வாழ்க்கையில் பெரும்பாலான அளவு தொகையை வாடகைக்கே செலவழித்து இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் சொந்த வீட்டை கட்டும் அளவுக்கு தொழில் முன்னேற்றத்தை அளிக்கும்.

அந்த கோவில் வேறு ஒன்றும் இல்லை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி எனும் இடத்தில் உள்ள முருகன் கோவில் தான். அங்குள்ள பாலசுப்பிரமணியன் வேண்டிய அனைத்தையும் வழங்க கூடியவர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சொந்த வீடு பற்றிய கனவை நினைவாக்குவார் என்று அப்பகுதி மக்கள் அனைவரும் கூறுகின்றனர்.

சிறுவாபுரியில் முருகன் நான்கரை அடி உயரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டியவற்றை தரக் கூடிய ஆற்றல் கொண்டவர் என அருணகிரி நாதர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் உள்ள முருகனின் சிலைய தவிர மற்ற சிலைகள் அனைத்தும் மரகத கற்களால் செய்யப்பட்டவை. இது மேலும் இந்த கோவிலுக்கு பெருமை சேர்க்கிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment