பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

பாதாம் பருப்பு மிகவும் சுவையானது. அப்படியே எடுத்துச் சாப்பிட்டால் அருமையான ருசி!

பாதாமை ஊறவைத்துதான் சாப்பிடவேண்டும்: ஏன்?

பாதாமை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார்கள் நிபுணர்கள். அதை இரவுமுழுக்க ஊறவைத்துவிட்டுக் காலையில் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாம்.

என்னென்ன நன்மைகள்?

1. நீரில் ஊறவைத்த பாதாமிலிருந்து லிபேஸ் என்கிற நொதி வெளியிவிடப்படுகிறது. இதனை உண்ணும்போது, நாம் சாப்பிட்ட மற்ற உணவுகள் எளிதில் செரிக்கின்றன.

2. உணவில் கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் என இரண்டு வகைகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். அதில் கெட்டதைக் குறைத்து நல்லதை அதிகரிக்கும் குணம் ஊறவைத்த பாதாமுக்கு உண்டு. இது நமது உடல்நலத்துக்கு, குறிப்பாக இதயத்துக்கு நல்லது

3. ஊறவைத்த பாதாமைச் சாப்பிட்டால் நமது இரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெரோல் என்கிற பொருள் அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதேபோல் ஊறவைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும்

4. பாதாமில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு நல்லவை. இவை வயிற்றை நிரப்பிவிடுவதால், நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடமாட்டோம், உடல் எடை குறையும்

5. கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் போதுமான அளவு கிடைக்கும்போது, குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது, பிறப்புக் குறைபாடுகள் குறைகின்றன. இந்த ஃபோலிக் அமிலத்தை ஊறவைத்த பாதாம் வழங்குகிறது

6. இவற்றுடன், ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்களால் இளமைத்தோற்றம் கிடைக்கும், இதிலுள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை எதிர்க்கும்…

இப்படி இன்னும் பலப்பல நன்மைகள்!

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
    1. Bharathi January 8, 2017
      • jeeva February 10, 2017
    2. Prabhakaran October 23, 2017

    Add Your Comment