இந்தியாவில் ஸ்மார்ட்போன் : ஹூவாய் நிறுவனம்

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய், தற்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பிளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. மேலும் அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட்போன்களை சென்னையில் உள்ள பிளக்ஸ் நிறுவனத்தில் உற்ப்பத்தியை தொடங்க உள்ளது. இந்த ஆலையின் உற்பத்தித் திறன் 2017 ஆம் ஆண்டு இறுதியில் 30 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தனது விற்பனை மற்றும் சேவை மையங்களின் எண்ணிக்கையை ஹுவாய் நிறுவனம் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்துக்கு 200 சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் 30 மையங்கள் முதன்மை நிறுவனங்களாக உள்ளது. இந்த ஆலையை மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கி வைத்து கூறுகையில் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருவதற்கு இந்த ஆலை தொடங்கப்பட்டதே மிகச் சிறந்த உதாரணம் என்று கூறினார்.

 

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment