உப்பினைக் கொண்டு சருமத்தினை பராமரிப்பது எப்படி ?

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று கூறுவதற்கு தகுந்தாற் போல் உப்பு நமது வாழ்வினில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது.

அப்படி பலப்பயன்களை கொண்ட உப்பானதை உணவுக்காக மட்டுமல்லாமல் நம் உடல் அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம்.

வாருங்கள், உப்பினைக் கொண்டு நம் தோல் மற்றும் தலை முடி பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என பார்ப்போம்.

– நமது தலை முடி பிரச்சனைகள் பல உண்டாக, நமது தலையில் உள்ள அதிகமான எண்ணெய் பசை தான் காரணம். அதற்கு நாம் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் உப்பினை 2-3 டேபிள் ஸ்பூன் கலந்து , தலைக்கு தேய்த்து குளிக்கவும். இப்படியே வாரத்திற்கு ஒருமுறை செய்தால் எண்ணெய் பசை நீங்கி கூந்தல் பிரச்சனைகள் சரியாகிவிடும்.

– சருமம் பொலிவிழந்து இருப்பதை சரி செய்ய , சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்க வேண்டும். அதற்கு 2 ஸ்பூன் கல் உப்புடன் ½ கப் தேங்காய் எண்ணெய் கலந்து, அதைக் கொண்டு உடலை தேய்த்து கழுவி வர இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவுடன் மின்னும்.

– நம் பாதங்களின் அழகை கெடுக்கும் அழுக்கினை நீக்க மற்றும் குதிகால் வெடிப்பினைப் போக்க, உப்புடன் ஆலிவ் எண்ணெய் சம அளவில் கலந்து , பாதங்களில் மெதுவாக தேய்த்து ஊற வைத்து கழுவுங்கள். இப்படியே வாரம் 2-3 தடவை செய்தால் பாதங்கள் அழகாய் தோன்றும்.

– வெட்டுக் காயங்களில் விரைவில் தொற்று நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க, கொஞ்சம் தண்ணீரில் உப்பு கலந்து காயங்கள் மீது ஊற்றுங்கள். கொஞ்சம் எரிந்தால் பொறுத்துக்கொள்ளவும். உப்பு தன் (மருந்து) வேலையை செய்வதற்கான அறிகுறி அது !!!

– பல நாட்களாக தலை வலியினால் அவதிப்பட்டால் 1 டம்பளர் தண்ணீரில் உப்பு சிறிது கலந்து குடியுங்கள். விரைவில் தலை வலி நீங்கும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.