சிவ பெருமானால் அருள் பெற்ற வேடன் கதை பற்றி தெரியுமா?

ஒரு முறை வேட்டைக்காரன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்று உள்ளான். அதிக நேரம்  அதிக இடத்தில் சுற்றி  திரிந்தும்  ஒரு விலங்கு கூட அவனிடம் சிக்கவே இல்லை. பகல் பொழுதும் இருட்டி விட்டது. அந்த சமயத்தில் புலி ஒன்று அந்த வழியில் வந்துள்ளது. வேடன் வழியில் வந்த புலிக்கு பயந்து அங்கு இருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான்.

புலியும் அந்த இடத்தை விட்டு செல்லாமல் மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. வேடனும் மரத்தை விட்டு இறங்காமல் மேலே படுத்து இருந்தான். திடீரென் தூக்கம் வந்துவிட்டால் என்ன செய்வது கீழே விழுந்து புலிக்கு உணவாகி விடுவோம் என்று அவனுக்கு தோன்றியது. அதனால் அவன் அங்கு இருந்த மரத்தின் இலைகளை கீழே பறித்துப் போட்டுக் கொண்டே இருந்தான்.

இலைகள் எல்லாம் மரத்தின் அடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தன. இது அவனுக்கு தெரியாமல் நடந்த ஒரு நல்ல விஷயம். மேலும், அன்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் சிவபெருமானை கண் விழித்து பூஜித்த பலனையும் தன்னை அறியாமலேயே பெற்று விட்டான். அதனால் சிவபெருமான்  வேடனுக்கு முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் என்று புராணக் கதையில் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை அனைத்தும் நம்மை விட்டு விலகி போகும் என்கிற மாபெரும் நம்பிக்கை உள்ளது.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment