சிகப்பான உதடு வேண்டுமா? அப்போ இதை செய்யுங்க!

நாம் வெளியில் செல்லும் போது ஏற்படும் வெயிலின் தாக்கத்தினால் சருமம் மட்டுமில்லை உதடுகளும் கருப்பாக மாறிவிடும் தன்மை கொண்டது. புறஊதா கதிர்களிலிருந்து காக்கும் படலம் உதட்டில் இல்லை. பெண்கள் பெரும்பாலும் லிப்ஸ்டிக் பூசினாலும் அது தற்காலிகமாக மட்டுமே ஈரப்பதம் வழங்கும். அது மட்டுமில்லாமல் அதில் உள்ள கெமிக்கல் உதடுகளில் வெடிப்பை ஏற்படுத்தும். சிகப்பான உதடுகளை பெறுவதற்கான சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை:-

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு, தேன், சர்க்கரை ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறை இந்த கலவையை உதட்டில் தடவினால் மிருதுவான, சிகப்பான உதடு கிடைக்கும்.

தேன், பாதாம் எண்ணெய், கோக்கோ பட்டர் மூன்றையும் முதலில் கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் நாட்டு சர்க்கரை மற்றும் சீனியை கலந்து உதட்டில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். அல்லது இந்த கலவையை பருத்தி துணியால் ஒத்தி எடுக்கலாம் அல்லது லிப் பாமாக போட்டாலும் நல்லது. இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் உதடுகள் அழகு பெறும்

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.