ஒரே வாரத்தில் சிகப்பழகை பெற வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தும் முறை!

மாசடைந்த சுற்றுச்சூழல், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் ஆகியவை சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது மட்டுமில்லாமல் சருமத்தில் கண்ட கண்ட கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவதாலும் சருமம் கருமை அடைகிறது. இப்போது சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கி சிகப்பழகை பெற உதவும் எளிய வழிகளை பார்க்கலாம்.

சிகப்பழகை பெற வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தும் முறை:-

  • முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
  • தக்காளியுடன் எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
  • கடலை மாவு, தேன் மற்றும் மஞ்சள் தூள் மூன்றையும் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடாக பார்க்க முடியும்.
  • மைசூர் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் ஒன்றாக அரைத்து பொடியாக்கி அதில் முல்தானி மெட்டி மற்றும் மஞ்சள் தூள், பப்பாளி ஆகியவற்றையும் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • உருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாறும்.
  • சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து கிடைக்கும் நீரால் முகத்தை 15 நாள்கள் கழுவினால் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை உணர முடியும்.
  • கேரட் மற்றும் அவகோடா பழத்தை அரைத்து தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து கலந்து கைகள் மற்றும் கால்களில் தடவி காய்ந்ததும் கழுவினால் சரும நிறம் அதிகரிக்கும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.