Hello சொல்லுங்கள் “Google Allo ” விற்கு

இன்றய சந்தையில் பல்வேறு விதமான messaging app-கள் உள்ளன. சற்று நாட்களுக்கு முன் வீடியோ காலிங்கு என்றே பிரத்தியோகமாக வெளியிடப்பட்ட Google Dou விற்கு அடுத்து கூகிள் நிறுவனம் புதிதாக Google Allo என்ற messaging app- பை வெளிட்டு உள்ளது.இது சந்தையில் ஏற்கனவே உள்ள whatsapp, telegram போன்ற app-களுக்குள் போட்டியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த Goole Allo-வில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் சேர்த்துள்ளதால், அவசரம் / சூழ்நிலைக்கேற்ற பதில்கள் தானியங்கி முறையில் உடனடியாக பெற முடியும். மேலும் தகவல் பரிமாற்றம் குறியீடு மொழிகளிலேயே கடத்தப்படும்.

இதனுடன் தகவல்கள் கூகுள் சர்வரில் சேமிக்கப்படும் என்பதால் பாதுகாப்பிற்கும் வேகத்திற்கும் அதிக முக்கியம் அளிக்கப்படும்.

புதிதாய் களம் கண்டுள்ள இந்த Google Allo app – இல் Voice Message,Smart Replay, Whisper Shout போன்ற வசதிகள் உள்ளன. மேலும் காலாவதியாகும் செய்திகளை தானே அழிக்கும் வசதியும் உள்ளது. இத்துடன் incognito conversation என்ற மறைநிலை உரையாடல் வசதியும் செய்யப்பட்டுள்ளது

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.