சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பொதுவாகவே கிழங்கு வகை உணவுகளை சாப்பிட்டால் உடல் பருமனாகிவிடும் என்று எல்லோரும் சொல்லி கேள்விபட்டிரீப்பர்கள். அதை போல தான் சர்க்கரை வள்ளி கிழங்கும். அதிகமான அளவில் இனிப்பு சுவையுடனும் வாசணையுடனும் இருக்கும். இதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-

  • விட்டமின் ஏ, பி, சி, இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் இதில் அதிக அளவில் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
  • எல்லா கிழங்கு வகைகளிலும் கொழுப்பு சத்துகள் நிறைந்திருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு சத்துகள் கிடையாது. ஆனால், அதிக அளவில் நார்ச்சத்து அடங்கி உள்ளது.
  • உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள், வீக்கங்கள், போன்றவற்றை சரிசெய்யும். அதிக அளவிலான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளன.
  • கரு வளர்ச்சிக்காக காத்திருப்பவர்கள் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்டால் அதில் உள்ள போலேட் கருவளர்ச்சிக்கு உதவும்.
  • சர்க்கரை வள்ளி கிழங்கை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ அல்லது எண்ணெயில் பொரித்தோ சாப்பிடலாம். எந்த முறையில் சாப்பிட்டாலும் அதன் முழு சத்தும் நமக்கு கிடைக்கும்.
  • நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து மூச்சு விடுவதை சீராக்குகிறது.
  • இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் வயிற்றில் ஏற்படும் அலசரை சரி செய்கிறது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.