தினமும் சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் என்ன பயன் தெரியுமா?

சப்போட்டா பழம் முதன் முதலில் அமெரிக்காவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர் இந்தியாவிலும் விளைய வைக்கப்பட்டது. இந்தியாவில் சப்போட்டா பழ விளைச்சலில் கர்நாடகா மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. அதிக அளவிலான நார்ச்சத்துகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளை கொண்டுள்ளது. இது அதிக அளவிலான இனிப்பை கொண்டுள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி இதனை சாப்பிடலாம். இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

சப்போட்டா பழத்தை சாப்பிட்டால்  ஏற்படும் பயன்கள்:-

  • இந்த பழத்தில் உள்ள வைட்டமின் – ஏ மற்றும் வைட்டமின் – சி கண் பார்வையை அதிகரிப்பதோடு, பார்வை குறைபாட்டை தடுக்கும்.
  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல், உடல் தளர்ச்சி, சோர்வு போன்றவற்றை நீக்கி உடலுக்கு தேவையான சத்துகளை தாயுக்கும் குழந்தைக்கும் வழங்குகிறது.
  • நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு, வயிற்று உபாதைகளையும் குணப்படுத்தும்.
  • தினம் ஒரு சப்போட்டாப் பழம் சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் சோம்பல் இல்லாமலும் கழிக்கலாம்.
  • சப்போட்டாப் பழம் மட்டுமில்லாமல் விதைகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவும்.
  • சப்போட்டாவில் உள்ள கால்சியம் மற்றும் மினரல்ஸ்கள் எலும்புகளுக்கு வலிமை அளித்து வயதானால் ஏற்படும் மூட்டுவலியை ஏற்படாமல் தடுக்கிறது.
  • தினம் ஒரு சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரித்து இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
  • இந்த பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் வாய் மற்றும் குடலில் ஏற்படும் புற்றுநோயை வராமல் தடுக்கிறது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.