உடலின் எல்லா பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் உப்பு!

உப்பு எல்லா விதமான சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது. சமையலறை மட்டுமில்லாமல் நமது சரும அழகிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கூட உப்பை பயன்படுத்தலாம் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். உப்பை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.

உப்பின் பல்வேறு பயன்கள்:-

  • உடலின் ஏதேனும் பாகத்தில் வலி ஏற்பட்டால் உப்பை பயன்படுத்தி ஒத்தடம் கொடுத்தால் வலி உடனே சரியாகும். உப்பை குளிக்கும் நீரில் பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் அழற்சி குறையும்.
  • உப்பை பாதாம் எண்ணெயுடன் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி கொள்ள வேண்டும். பின்னர் ஸ்க்ரப் செய்து முகத்தை கழுவினால் வறண்ட சருமம் மறைந்து சருமம் வழுவழுப்பாக மாறும்.
  • உப்பை நீரில் கரைத்து பின்னர் சிறிதளவு தேனை அந்த நீரில் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு முகப்பருக்கள் ஏற்படுவது குறையும்.
  • பேக்கிங் சோடாவுடன் உப்பை கலந்து பல் தேய்த்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை மற்றும் கிருமிகள் அழிந்துவிடும். இதனால் பற்களை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.
  • தொண்டையில் ஏற்படும் புண் மற்றும் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை சரி செய்ய உப்பு கலந்த நீரினால் வாய் கொப்பளித்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
  • உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தால் அந்த இடத்தில் இரத்தம் நின்ற பின்னர் உப்பை தடவினால் புண் விரைவில் ஆறிவிடும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.