ருத்திராட்சம் அணிவதால் அப்படி என்ன பயன்கள் நமக்கு கிடைக்கப் போகிறது!

ருத்ராட்சத்திற்கே உரிய பல தனிச் சிறப்புகள் உண்டு. அது தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. உங்களுக்கு பழக்கம் இல்லாத இடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகளை உங்களுக்கு ஏற்றதாக மாற்றி எவ்விதமான பாதிப்பும் நம்மை அண்ட முடியாமல் பாதுகாக்கும். உங்களின் மனநிலையை எப்போதுமே அமைதியாகவே வைத்து இருக்கும். ருத்திராட்சத்தை ஆண், பெண் பாகுபாடின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கி மன அமைதியையும்  சுறுசுறுப்பையும் தரும்.

ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவ பெருமானின் மூன்று கண்ணிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தட்டு விதமான ருத்திராட்சங்கள் உருவாகின. ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக சக்தி வாய்ந்த விரைவான ஆன்மா உணர்வை ஊட்டும் நிலையாகும். தவ நிலையிலிருந்து  வெளிப்பட்டவுடன் விரைவான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம் அடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.

சூரியனுக்கு இணையான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய  ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் இங்கு நிலவும் சூழ்நிலை முழுவதையும் கட்டுப்பாட்டில் வைக்கும் சக்தி கொண்டது. ஆறுமுகம் கொண்ட சண்முக ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் முழு அன்பும் கிடைக்கும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment