ரோஸ் வாட்டரை சருமத்தில் எப்படி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் தெரியுமா?

ரோஸ் வாட்டர் பெரும்பாலும் அனைத்து இடங்களிலு கிடைக்க கூடிய ஒன்று தான். இதை சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டரை எதற்கெல்லாம் எப்படி பயன்படுத்தலாம் என்று இப்போது பர்க்கலாம்.

ரோஸ் வாட்டர் சருமத்தில் எப்படி பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள்:-

  • ரோஸ்வாட்டரை 30 நிமிடம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் அதை காட்டன் துணியில் முக்கி எடுத்து சிறிது நேரம் கண்களில் வைத்தால் கண்களில் வீக்கம் ஏற்படுவது குறையும். மேலும் கண்ணை கவர்ச்சியாக மாற்றிவிடும்.
  • வெயில் நேரத்தில் சருமம் பொலிவிழந்து காணப்படும். இதற்கு ரோஸ் வாட்டரை சருமத்தில் பயன்படுத்தினால் முகம் புத்துணர்ச்சியாக மாறும். ஒரு நாளுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் இதை செய்யலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
  • குளிக்கின்ற நீரில் ரோஸ் வாட்டரை கலந்து குளித்தால் சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியும்.
  • வறட்சியான சருமம் உள்ளவர்கள் ரோஸ் வாட்டரை சருமத்தில் பயன்படுத்தி வந்தால் சருமத்தை ஈரப்பதத்துடனும், அழகாகவும் மாற்ற முடியும்.
  • மேக்கப் செய்த பின்னர் ரோஸ் வாட்டரை முகத்தில் சிறிதளவு தெளித்து கொண்டால் அழகாக் காட்சி அளிக்கலாம். மேலும் மேக்கப்பை ரிமூவ் செய்யவும் இது பயன்படுகிறது.
  • ஷேவிங் செய்து முடித்த பின்னர் முகத்தில் இதை பயன்படுத்தினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம்.
  • சருமத்தில் இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் இளமையாகவும், சரும சுருக்கம் இல்லாமலும் பார்த்து கொள்ள முடியும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.