உடல் சோர்வா இருக்கா? அப்ப இந்த குளியலை ட்ரை பண்ணுங்க!

எப்பொழுதும் கடினமான வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து ஓய்வு எடுக்க உட்கார்ந்தாலும் உடல் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படக் கூடும். இந்த மாதிரியான சமயங்களில் உங்களை சுறுசுறுப்பாக மாற்ற உதவும் வெண் கடுகுக் குளியலை பற்றி இப்போது பார்க்கலாம்.

தயாரிக்க தேவையானவை:-

வெண் கடுகு பொடி, கடல் உப்பு, எப்ஸம் உப்பு, சமையல் சோடா, அரோமா எண்ணெய் அல்லது பாதாம் அல்லது லாவண்டர் எண்ணெய் இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்து தேவைப்படும் போது மட்டும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

மேலே தயாரிக்கப்பட்ட கலவையில் இரண்டு ஸ்பூன் எடுத்து குளிக்கும் நீரில் கலந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பின்னர் அந்த நீரில் குளிப்பதால் அதில் உள்ள அனைத்து மருத்துவ குணங்களும் உடலுக்குள் சென்று சேர்கிறது. இதனால் உடலை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க முடியும். மேலும் உடலில் உள்ள பித்தத்தை குறைக்கிறது.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.