தைராய்டு நோயை தடுக்க சிறந்த வழிகள்!

தைராய்டு சுரப்பியானது அதிக அளவிலான பழுப்பு மற்றும் சிவப்பு நிற ரத்த நாளங்களை கொண்டுள்ளது. இதில் உள்ள நரம்புகள் குரலுக்கு முக்கியமானதாக உள்ளது. தைரய்டு சுரப்பி ஹார்மோன்களை சுரக்கிறது. அவற்றில் முக்கியமானது தைராக்சின் (டி4), இது தான் உடலின் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, தூண்டுதல், வெப்பநிலையை சமநிலை படுத்த முக்கியமானதாக இருக்கிறது. தைராய்டு நோயை தடுக்க சில வழிகளினை இப்போது பார்க்கலாம்.

தைராய்டு நோயை தடுக்க சிறந்த வழிகள்:-

  • உணவினை சாப்பிடும் போது நிதானமாக மென்று சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிட்டால் உணவானது நேரடியாக வயிற்றுக்குள் செல்கிறது. இதனால் அதன் தொடர்ச்சியான பணி பாதிக்கிறது.
  • தொலைபேசி பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் தைராய்டு சுரப்பியை பாதிக்கிறது. செல்போனை நேரடியாக பயன்படுத்தி பேசுவதற்கு பதிலாக ஹெட் செட் பயன்படுத்தி பேசுவதால் இந்த பிரச்சனையினை தவிர்க்கலாம்.
  • தைராய்டு சுரப்பியானது தொண்டையில் உள்ளது. ஹைப்போ தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பிரச்சனையை மருத்துவரிடம் சொன்னால் மட்டுமே இதை குணப்படுத்த முடியும். இதை மறைப்பதால் ஒரு நன்மையும் இல்லை.
  • சர்வாங்காசனம் செய்வதன் மூலம் நாளமில்லா சுரப்பி மற்றும் தைராய்டு சுரப்பியை தூண்டி அதிக பயன் பெறலாம்.

தைராய்டு நோய்கள் உருவாக காரணங்கள்:-

காய்டர் தைராய்டு – அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இதனால் அதிக பாதிப்பு ஏற்படாது.

தைராய்டு அலர்ஜி – வைரஸ் தொற்று மூலம் இது உருவாகிறது. இதனால் அதிக வலி ஏற்படக் கூடும்.

ஹைப்பர் தைராய்டு – சுரப்பி அதிக அளவில் சுரப்பதன் மூலம் இது ஏற்படுகிறது.

ஹைபோ தைராய்டு – சுரப்பியின் அளவு குறைந்தால் இது ஏற்படும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.