வாஸ்துப் படி பூஜை அறையை அமைக்கும் முறை!

வாஸ்துப் படி பூஜை அறையை அமைக்கும் முறை:-

பூஜை அறை அமைப்பதற்கு மிகச் சிறந்த திசை வடகிழக்கு மூலை தான். வடக்கு, கிழக்கு திசைகளிலும் பூஜையறையை வைக்கலாம். பூஜை அறையின் மேல் பகுதி வீட்டின் பகுதியை விட தாழ்வாக இருக்க வேண்டும். அதன் கதவு மேலிருந்தே இருக்க வேண்டும். ஒற்றை கதவாக போடக் கூடாது. கட்டாயம் இரட்டை கதவாக அமைக்க வேண்டும். கதவின் துளைகளில் சிறு சிறு மணிகளை கட்டி தொங்கவிட்டால் எல்லா ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்கும்.

பூஜை அறைக்கு கிழக்கே சிறிய ஜன்னல் வைக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் சூரிய ஒளி பூஜை அறைக்குள் வரும் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். பூஜை அறையின் வடகிழக்கு பகுதியில் அதிக எடையுள்ள பொருளை வைக்க கூடாது. பூஜை அறையின் மேற்கு பக்கம் ஜன்னல் வைக்க கூடாது. பூஜை அறைக்கு பக்கத்தில் படுக்கையறை மற்றும் கழிவறை அமையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடவுளின் படங்களை மேற்கு அல்லது சுவரில் மாட்ட வேண்டும்.

ஆஞ்சநேயர் படத்தை தெற்கு திசை நோக்கி வைக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு நோக்கியவாறு விளக்குகலை வைக்க கூடாது. இறந்த நபர்களின் உருவப் படங்களை பூஜை அறையில் வைக்க கூடாது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.