வீட்டு பூஜை அறையில் கடைபிடிக்க வேண்டிய சில குறிப்புகள்!

  • தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் சுத்தமான மனதுடன் சில நிமிடங்களாவது அமர்ந்து கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
  • தினசரி காலை எழுந்தவுடன் கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல மணமுள்ள பூக்கள், தோட்டத்தில் இருக்கும் மலர்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் கூடிய பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள் போன்றவற்றை பார்த்தல் வேண்டும்.
  • வீடுகளில் பூஜை அறை தனியாக வைத்திருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்க கூடாது. இவை இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது.
  • சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
  • செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைத்தால் போதும்.
  • நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். அமாவாசை மற்றும் திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
  • அமாவாசை, பௌவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment