கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவால் பெட்ரோல், டீசல் விலை உயரும்

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவால் பெட்ரோல், டீசல் விலை உயரும்:-

கடந்த சில ஆண்டுகளாக விலை உயர்வு பெரும் பிரச்சனையாகி உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

எண்ணெய் நிறுவனம் சில சமயம் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கும். பின்பு அடுத்த இரண்டு நாள்களில் இரண்டு ரூபாய் அதிகரித்து விடும். இது போன்ற சூழ்நிலை தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வருகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு இரண்டு முறையாவது எண்ணெய் விலையை மாற்றி அமைக்கிறது. இதற்கு காரணம் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, ஏற்றுமதி, இறக்குமதி செலவுகள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது, போன்ற காரணங்களால் மாறுகிறது.

கடந்த ஆண்டில் ஒரு பேரல் விலை 50 டாலருக்கும் குறைவாக இருந்தது. இருப்பினும் இந்தியாவில் விலை உயர்வு ஏற்பட்டது. கடந்த ஆண்டு எண்ணெய் நிறுவனங்கள் ஒரு பேரலின் விலையை 50 டாலருக்கும் அதிகமாக மாற்றியது. இதன் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

கச்சா எண்ணெயின் விலை குறைவாக உள்ள போது அந்த நாடுகள் அதன் உற்பத்தியை குறைப்பது வழக்கம். கச்சா எண்ணெயின் விலை உற்பத்தியின் போதே இந்தியாவில் பெட்ரோல் விலை ரூபாய் 70-ஐ தொட்டது. இப்போது அரேபிய நாடுகளில் உற்பத்தியை குறைப்பதால் இந்தியாவில் எண்ணெயின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment