குணசீலம் வெங்கடாசலபதி பெருமாள் கோவில்

திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த திருத்தலம் மனநோயால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்தி அடைய வழிப்பட வேண்டிய தலமாக இந்த தலம் உள்ளது. இந்த கோவில் திருச்சிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தலத்தின் அருகில் காவிரி ஆறு ஓடுகிறது.

இந்த தலத்தில் உற்சவரான சீனிவாசர், ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் சாளக்கிராம மாலை அணிந்து தங்க செங்கோலுடன் காட்சி அளிக்கிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

மாதந்தோறும் திருவோண தினதன்று சுவாமிக்கு கருட சேவை நடைபெறுகிறது, வைகாசி விசாகத்தன்றும் விஷேச பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியில் தெப்ப திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. குணசீலத்தில் உள்ள வெங்கடாசலபதி கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.