உங்கள் பாதத்தில் வெடிப்பு உள்ளதா கவலையே வேண்டாம்

பாதத்தில் சிலருக்கு அடிக்கடி  வெடிப்பு ஏற்படக் கூடும். அது சில நேரங்களில் வலியை ஏற்படுத்தும். பாத வெடிப்பானது மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும் மரியாதையை குறைக்கும்.

இது பெரும்பாலும் பித்தத்தினால் ஏற்படுகிறது. இந்த வெடிப்பை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என்றாலும் வராமல் தடுக்கலாம். வெடிப்பை போக்க சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

வழிமுறைகள்:-
  • அரிசி மாவு, தேன், ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து பசையாக்கி பாதங்களில் 15 நிமிடம் ஊறிய பின்பு கழுவினால் அது மாறும்.
  • பெட்ரோலியம் ஜெல்லி அல்லது வேஸ்லினுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்து காலை கழுவினால் போதும். ஒரு வாரத்துக்குள் வெடிப்பு மறைந்து விடும்.
  • வாழைப்பழம், தேன் கலந்து பசையாக்கி வெடிப்பில் தடவி பின்பு கழுவினால் இது முழுமையாக மறையும்.
  • தினமும் தூங்குவதற்கு முன் வெஜிடெபிள் எண்ணெய் கொண்டு பாதத்தில் மசாஜ் செய்தால் போதும். பித்தவெடிப்பு மறைவதுடன் பாதம் மிருதுவாக மாறும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.