பற்க்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்!!!!!

அனைவருக்குமே பற்களில் பிரச்சனை என்றால் அது சொத்தை பல் பிரச்சனைதான். இதற்கு வயது வித்தியாசம் என்பதே இல்லை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை வரும்.இந்த சொத்தை பற்க்கள் வருவதற்க்கு நிறைய காரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமானது அதிக அளவில் இனிப்புக்களை உண்பதுதான்.

மேலும் சில உணவுகள் பற்க்களின் இடையில் தங்கிக்கொள்ளும் இவை நீண்ட நாட்களாக இருந்தால் அந்த உணவின் மூலம் பாக்டிரியாக்கள் உருவாகி பற்க்களை அரிக்க ஆரம்பித்துவிடும்.இதனால் பற்க்களில் துவாரங்கள் ஏற்பட்டு, வாயில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடும்.

எனவே பற்களை ஆரொக்கியமாக பார்த்துக்கொள்ள தினமும் இரு முறை பல் துலக்க வேண்டும். ஏதெனும் உண்டால் முடித்துவிட்டு வாய்கொப்பளிக்க வேண்டும்.

பற்களுக்கு சில உணவுகள் நல்லது சில உணவுகள் கெட்டது என எல்லோருக்குமே தெரியும்.பற்க்கள் போதிய சத்துக்கள் இல்லாமல் பலகீனமாக இருந்தால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகலாம். ஆகவே பற்க்களுக்கு தேவையான சத்துக்களான நார்ச்சத்து, கால்சியம் சத்துக்களை வழங்கும் உணவுகளை உண்டால் பற்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளலாம். அவை என்னென்ன என கீழே காண்போம்.

  • இனிப்பான பழங்களான திராட்சை மற்றும் பீச் பழங்களை சாப்பிட்டால் இவை பற்க்களில் சிக்கிக்கொண்டு கேடு விளைவிக்கும். எனவே இனிப்புச்சத்து குறைவான நார்ச்சத்து கால்சியம் சத்து அதிகம் உள்ள பழங்களை உண்டு வந்தால் பற்கள் நலமுடன் இருக்கும்
  • காய்கறிகளில் மற்ற உணவுகளை விட நார்ச்சத்து அதிகம். அதிலும் காரட், பச்சை காய்கறிகள் மற்றும் இலைக்கறிகளில் நார்ச்சத்து மிகவும் அதிகம்.இவை பற்க்களை சொத்தை ஏற்படாமல் காக்கும்.
  • தானியங்கள் கூட பற்க்களுக்கு நல்லது அதிலும் சுத்திகரிக்கப்படாத தானியங்கள் மிகவும் நல்லது. கம்பு சோளம் ப்ரவுன் அரிசி போன்றவைகள் பற்ச்சொத்தை பிரச்சனைக்கு மிகவும் நல்லது.
  •   உலர்திராட்சையில் உள்ள போட்டோஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள் வாய் துர்நாற்றத்தை ஏற்ப்படுத்தும் கிருமிகளை கட்டுப்படுத்தும்.
  • பெரும்பாலும் கடல் உணவுகளில் கால்சியம் , பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன.இவை பற்க்களை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளும்.
  • எந்த ஒரு இனிப்பு சாப்பிட்டாலும் உடனே புதினா இலையை மென்று உண்டால் இனிப்பினால் உண்டாகும் கிருமிகளை கட்டுப்படுத்தும்
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.