பணப் பிரச்சனையை குறைக்க உதவும் இறைவழிபாட்டு முறை!

பணப் பிரச்சனையை சரி செய்ய சில வாஸ்து முறைகளை செய்வது மட்டுமன்றி இறை வழிபாட்டின் மூலமும் பணத்தை நம்மிடம் ஈர்த்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். பொதுவாகவே இறைவன் மீது அதிக பக்தியாக இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ணிய பலம் கூட்டி. பண வரவு அதிகரிக்கும்.

பணப் பிரச்சனையை குறைக்க உதவும் இறைவழிபாட்டு முறை:-

 • வெள்ளளிக்கிழமை சுக்கிர ஓரையில் மொச்சை பயறு மற்றும் சுண்டலை மகாலஷ்மிக்கு படைத்து நெய்வேத்யம் செய்து நமது  குடும்பத்தினர்கள் மட்டும் அதை சாப்பிட வேண்டும். தொடர்ந்து  48 நாள்கள் செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.
 • அபிஜித் நட்சத்திரத்தில் பகல் 12 மணிக்குதிருநங்கைக்கு  உணவளித்து அவள் கையால் சிறு பணத்தை பெற்றால் பணம் நிலைத்து இருக்கும்.
 • வெள்ளிக் கிழமைகளில் பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேக செய்வதற்கான பசும் பாலை வழங்கிட பணம் உங்களை தேடி வரும். பச்சை நிற வளையலை தாயாருக்கு அணிவித்திட்டால் பணம் கிடைக்கும்.
 • 24 வெள்ளிக் கிழமைகளில் பசும் பாலை சுக்கிர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றி வணங்கினால் நிச்சியமாக பணம் வரும்.
 • எப்போதும் குளித்த உடன் முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும். பின்னர் முகம் மற்றும் தலையை துடைக்க வேண்டும் இதை செய்வதன் மூலம் தரித்திரம் விலகி நன்மைகள் நடக்கும்.
 • தமிழ் மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதம் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்தால் நிச்சயமாக நீங்கள் கோட்டீஸ்வரர் ஆகலாம்.
 • நீங்கள் குடியிருக்கும் வீட்டின் வட கிழக்கு பகுதியில் கிணறு அல்லது நெல்லிக்காய் மரம் அல்லது வில்வ மரம் இருந்தால் அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
 • தினமும் அதிகாலையில் வீட்டில் சுப்பிரபாதம் அல்லது, விஷ்ணு நாமம் வீட்டில் கேட்குமாறு செய்தால் செல்வம் சேரும்.
 • வீட்டின் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளியால் ஆன தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
 • ஒவ்வொரு மாதத்திலும் பெளர்ணமியன்று சத்திய நாராயண சாமிக்கு பூஜை செய்து வந்தால் வேண்டிய செல்வங்களை பெறலாம்.
 • ஐப்பசி மாதத்தின் எல்லா வளர் பிறையிலும் மகாலட்சுமியை மனதாற வழிபட்டால் செல்வம் பெருகும்.
 • உப்பு வாங்குவதற்கு முன்னர் சுக்ர ஓரை பார்த்து வாங்கினால் வீட்டில் செல்வம் வந்து குவியும்.
 • ஒவ்வொரு வாரமும் வௌளிக் கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் வந்து சேரும். சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இரு வேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம் சேரும்.
 • சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கினால் செல்வம் சேரும். பைரவரின் பிறந்த நாளன்று தூய பன்னீரில் அபிஷேகம் செய்தால் பணம் சேரும்.
 • தாய் பசு மற்றும் கன்றுக்குட்டிக்கு உணவளித்தால் சகல விதமான செல்வங்களும் உங்கள் வசமாகும்.
 • வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்தால் லஷ்மியின் அருள் கிடைக்கும்.மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் நிறுவனத்திலும் தெளித்து வந்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
 • ஆந்தை படத்தினை தினமும் பார்த்து வந்தால் பண வரவு அதிகமாகும். தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதியின் படத்தை காலை எழுந்தவுடன் பார்த்து வந்தால் பணம் கிடைக்கும்.
 • பைரவருக்கு தொடர்ந்து 9 வாரம் 9 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
 • குபேரனுக்கு தாமரை திரியில் விளக்கேற்றி வழிபட்டால் எதிர்பாராத பணம் வரும்.
 • உங்களின் குல தெய்வம் மற்றும் இறந்த முன்னோர்களை இடை விடாமல் வணங்கி வந்தால் குடும்பத்தில் நல்ல விதமான முன்னேற்றம் ஏற்படும்.
 • திருமலையில் உள்ள வெங்கடாஜலபதிக்கு வெள்ளை நிற பட்டு அணிவித்து வழிபட்டால் செல்வம் சேரும்.  வீட்டில் துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதை பூஜை செய்து வணங்கி வந்தால் தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
 • செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி பூவை பயன்படுத்தி செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கி எல்லாவிதமான வளமும் பெருகும்.
 • ஏகாதசி திதியில் பெருமாளின் பாதத்தை வீட்டில் வரைந்து பூஜை செய்து வழிபட்டால் பூமி லாபம் மற்றும் செல்வ வளம் கிட்டும்.
 • கோவிலில் லட்சுமி மீது வைத்து வழிபட்ட தாமரை மலரை வீட்டிற்கு கொண்டு வந்து பச்சை நிற பட்டில் எடுத்து வைத்து அப்படியே பணப் பெட்டியில் வைத்து விட வேண்டும். இதை செய்வதன் மூலம் வீட்டில் பணம் சேரும்.
 • நம்முடைய சம்பளத்தில் ஒரு தொகையை எடுத்து அதை அன்னதானத்திற்கு செலவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஐந்து மடங்கு பணம் நம்மிடம் வந்து சேரும்.
 • ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை வாங்கி அதனை தினமும் அணிந்து வர பணம் வரும்.
 • வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர ஓரையில் மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் தன லாபம் கிட்டும்.
 • ஐஸ்வர்ய லட்சுமி படத்தை வாங்கி அதில் வாசனை திரவியம் தடவி பணப்பையில் அப்படியே வைத்து விட வேண்டும். இதை செய்வதன் மூலம் பண வரவு அதிகமாகும்.
 • வீட்டில் இருந்த பெரியோர்கள் யாரேனும் சுமங்கலியாக இறந்து இருந்தால் அவர்களை மனதில் நினைத்து மஞ்சளால் பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகல தோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
 • மகாலட்சுமிக்கு பச்சை நிற பட்டினை சாத்தி வணங்கினால் அதிகப்படியான பணம் வரும்.
 • கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மாலை செய்து மகா சங்கடஹர சதுர்த்தியில் அர்ச்சனை செய்து வணங்கி வர தொழிலிலுள்ள தடை எல்லாம் நீங்கி லாபம் கிட்டும்.
 • தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றி கிடைக்கும்.
 • வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சணா மூர்த்தியை வழிபாடு செய்து வந்தால் செல்வம் சேரும்.
 • வெள்ளிக் கிழமை காலை நேரத்தில் சுக்ர ஓரையில் சுக்ரன் மற்றும் மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலரை வைத்து 33 வாரம் வழிபட்டால் செல்வம் கிடைக்கும்.
 • பொதுவாக செந்தாமரையில் வீற்றிருக்கும் தெய்வங்களை வழிபட போதுமான அளவு பணம் கிடைக்கும்.
 • உங்களின் குல தெய்வத்தை தினமும் அதிகாலை நேரத்தில் எழுந்து நீராடி நம்பிக்கையுடன் வழிபட எதிர்பாராத அளவு பணம் நிச்சயம் வரும்.
 • அமாவாசை நாள்கள் அல்லது முன்னோர்கள் இறந்த திதியில் முன்னோர்களை வேண்டி ஏதாவது ஒரு தானம் செய்ய வேண்டும். இதை நாம் செய்தால் பெருமளவிலான பணம் வரும்.
 • ஆந்தையை தொடர்ந்து வழிபட்டு வந்தால் பணம் கிடைக்கும்.
 • ஜோடியாக உள்ள கழுதை படம் மற்றும் ஓடும் குதிரைகளின் பட்த்தை அடிக்கடி பார்க்க பணம் வரும்.
 • யாருக்கேனும் பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று பணம் கொடுக்கக் கூடாது. நீங்கள் கொடுப்பவராக இருந்தாலும் சரி வாங்குபவராக இருந்தாலும் வாசல் படியில் நின்று கொண்டு இதை செய்யக் கூடாது.

செல்வம் நிலைத்திருக்க பணம் கொடுக்கல் மற்றும் வாங்கலை செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் செய்வது நல்லது. கடன் கொடுப்பவராக இருந்தால் பணம் திரும்ப கிடைக்கும். வாங்குபவராக இருந்தால் பணத்தை எளிதில் திரும்ப கொடுக்க முடியும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.