உடலின் எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் தெரியுமா?

பல்லியானது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் எளிதாக காணக் கூடிய ஒன்று தான். அவை பெரும்பாலும் சுவர்களில் ஊர்ந்து செல்லும் எதிர்பாராத சமயத்தில் கீழே விழுந்து விட்டால் பிரச்சனை இல்லை. அதே நமது உடலின் மீது விழுந்தால் நன்மையும் நடக்கலாம், தீமையும் நடக்கலாம். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும். அவனுடைய தலையை வெட்டியது விஷ்ணு பகவானாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
ஒவ்வொன்றுக்கும் ஓவ்வொரு அர்த்தம் உண்டு. தீபாவளியன்று வீட்டில் பல்லியை காணவில்லை என்றால் வெளிச்சங்களின் பண்டிகையான தீபாவளி முழுமை பெறுவதில்லை. தீபாவளி அன்று பல்லியை காண நேர்ந்தால் குடும்பத்திற்கு செல்வமும் வளமும் வந்து சேரும் என நம்பப்படுகிறது.

பல்லி விழும் பலன்கள்:-

  • பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால், வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்மறையாக உணர்த்துகிறது. இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதியின்மை அல்லது குடும்பத்தில் மரணம் ஏற்படலாம். ஆனால் தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது விழுந்தால் ஏதோ ஒரு வகையிலான நன்மை கிட்டும்.
  • முக பகுதியில் புருவம், கன்னத்தில் விழுந்தால் ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம். உங்கள் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் அதுவே உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால், ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
  • இடது கை அல்லது இடது காலில் விழுந்தால்..
    மகிழ்ச்சி கிடைக்கும். இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.
  • பாதத்தில் அல்லது பிறப்புறுப்பில் விழுந்தால். பாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். பிறப்புறுப்பின் மீது விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.
  • வலது மணிக்கட்டு பகுதியில் பல்லி விழுந்தால் பிரச்சனை எற்படலாம். பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும்.
  • பல்லி உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment