பக்கவாதத்தை தடுக்கும் பொருட்கள் இதோ! சாப்பிட ஆரம்பிங்க!!!!!

பொதுவாக 50 வயதிற்கு மேற்ப்பட்ட ஒரு சிலருக்கு பக்கவாதம் என்னும் நோய் தாக்கியுள்ளதாக கேள்விப்பட்டு இருப்போம். பக்கவாதம் என்றால் என்ன என பார்ப்போம்.பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் இரத்ததின் அளவு குறைவதினால் அல்லது இரத்தக்குழாய்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டாலோ மூளையின் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும்.அப்படி பிரச்சனை ஏற்பட்டால் மூளையால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய இயலாது.இதனை தான் பக்கவாதம் என்று அழைப்பர்.

இந்த நோய் பரம்பரை பரம்பரையாகவும் அல்லது உணவு பழக்கவழக்கதினாலும், மற்றும் சுற்றுப்புறச்சூழ்நிலையாலும் வரலாம்.பரம்பரை பரம்பரையாக வருவது என்றால் குணப்படுத்துவது கடினம். மற்ற காரணங்களினால் வந்ததானால் குணப்படுத்த முடியும்.

மேலும் உடலில் அதிக அளவு இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், மற்றும்கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலும் பக்கவாதம் தாக்கும்.இந்த பிரச்சனையை தடுக்க நாம் உணவு கட்டுப்பாட்டை மேற்க்கொண்டால்  முடியும்.பக்கவாதத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாமா!!!!!!!!

  • பீன்ஸ்-ல் அதிக அளவு வைட்டமின் பி போலேட் உள்ளது. இதனால் இது மூளைக்கும், இதயத்திற்க்கும் நல்லது. இந்த வகையான போலேட் உணவுகள் பக்கவாதம் வராமல் தடுக்கும் என ஒரு ஆய்வின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.
  • ஒரு ஆய்வில் ஓட்ஸ் பாதாம் மற்றும் சோயா இவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே டயட்-ல் இருப்பவர்கள் இந்த ஓட்ஸ், பாதாம், மற்றும் சோயா வை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் காணலாம்.
  • காய்கறி மற்றும் பழங்களில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. இது இரத்தக் குழாய்களில் புண் மற்றும் ப்ளேக் போன்றவை வராமல் தடுப்பதின் மூலம் பக்கவாதத்தை கட்டுப்படுத்துகிறது.
  • வாழைப்பழம், உலர் திராட்சை மற்றும் முலைக்கட்டிய பயறு வகைகள் போன்றவற்றில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகள் பக்கவாதத்தை தடுக்கும் என ஒரு ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது.எனவே டயட் மேற்க்கொள்பவர்கள் இதனையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பாலிலும் பொட்டாசியம் கால்சியம் போன்றசத்துக்கள் நிறைய உள்ளது. இதும் பக்கவாதத்தை கட்டுப்படுத்தும் ஒரு பொருளாக அமைகிறது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.