தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

ஆரஞ்சு சாறில் அதிக அளவிலான சிட்ரஸ் அமிலங்கல் உள்ளது. இதை தொடர்ந்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் நம்மை நெருங்காமல் பார்த்து கொள்ள முடியும். ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:-

  • ஹெர்ஸ்பெரிடின் என்ற ஆரஞ்சில் உள்ள பொருளானது இதயத்தில் அடைப்பு உண்டாகாமல் தடுக்கிறது. இதனால் நெஞ்சு வலி வராமல் தடுக்கலாம்.
  • ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
  • ஆரஞ்சில் உள்ள ப்ளோவினோய்டு காயங்களையும் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்யும். உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதை விரைவில் குணமாக்கும்.
  • இதில் உள்ள வைட்டமின் – சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
  • அல்சரினால் குடலில் ஏற்படும் பாதிப்பை தடுத்து செரிமான மண்டலத்தை சரி செய்கிறது. தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் சிறுநீரக கற்களை கரைத்து விடும்.
  • புற்றுநோயை சரி செய்வதுடன் ஆரோக்கியமான சருமத்தை தரும். மேலும் முதுமையான சருமத்தை விரட்டி இளமையான சருமத்தை பெறலாம்.
  • அதிக அளவிலான உள்ள நார்ச் சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • இரும்பு சத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு வைட்டமின் – சி தேவை. ஆரஞ்சில் இது அதிகமாகவே உள்ளது. இதனால் இரத்த சோகையை சரிசெய்ய முடியும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.