நூறு கோடி மொபைல் பயனாளர்கள்

விரைவில் நூறு கோடி மொபைல் பயனாளர்கள் இருப்பார்கள் என ஜி எஸ் எம் எ யின் ஆய்வு கூறுகிறது. ஜி எஸ் எம் எ “இந்தியாவின் மொபைல் பொருளாதாரம் 2020” தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைப்படி , வரும் 2020 ஆம் வருடம் இந்த இலக்கை எட்டும் என கூறுகிறது.

கடந்த ஜூன் மாத இறுதியில் 61.6 மில்லியன் பயனாளர்களை கொண்டு , உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்துக்கு முன்றேறியது , இதனால் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளியது. அத்யாவசியமாகி போன மொபைல் பயன்பாடு, குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள், 3G மற்றும் 4G சேவை என நிறைய காரணிகளால் இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு இறுதியில் 3 மில்லியன்களாக இருந்த 4G பயனாளர்கள் 280 மில்லியன் அளவிற்கு 2020 ஆம் ஆண்டு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கென அதிக முதலீடுகளை தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் மேற்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment